மன்னார்குடியில் தபால் வாக்குகளை மொத்தமாக வாங்கி, அதை வாக்குப் பெட்டியில்
செலுத்த முயன்ற அரசுப் பள்ளிஆசிரியர் மீது தொகுதி தேர்தல் நடத்தும்
அலுவலர் அளித்த புகாரின்பேரில் வெள்ளிக்கிழமை போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
மன்னார்குடி புதிய புறவழிச் சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு மைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்று முடிந்த நிலையில், பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் தங்களின் தபால் வாக்குகளைச் செலுத்த வாக்குப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
அப்போது அந்தப் பெட்டியில் வாக்கு செலுத்த வந்த எடஅன்னவாசல் ஊராட்சி பள்ளி ஆசிரியர் எஸ்.நக்கீரன் என்பவர் சக ஆசிரியர்களிடமிருந்து பெற்று ஆறு தபால் வாக்குகளை வாக்குப்பெட்டியில் செலுத்த முயன்ற போது அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த தேர்தல் பறக்கும்படையினர் அதை கைப்பற்றினர்.பின்னர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ச.செல்வசுரபி விசாரணை நடத்தியதில் நக்கீரன் மேலும் 23 தபால் வாக்குகள் வைத்திருப்பது தெரிய வந்ததை அடுத்து அதையும் பறிமுதல் செய்தார்.இதுகுறித்து மன்னார்குடி காவல்நிலையத்தில், வெள்ளிக்கிழமை தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...