Home »
» அதிமுக தேர்தல் அறிக்கை 2016 : பள்ளிக் கல்வி மேம்பாடு , உயர்கல்வி மேம்பாடு
பள்ளிக் கல்வி மேம்பாடு :
- 11-ஆம்
வகுப்பு/12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்
கணினிகள் வழங்கப்படும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
- இந்த
மடிக் கணினியுடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதியும் மாணாக்கர்களுக்கு
வழங்கப்படும். பள்ளி மாணாக்கர்களுக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து
செயல்படுத்தப்படும்.
- பள்ளிக்
கல்வியின் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். உயர்நிலை
மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இணையதளம் வாயிலான ஒருங்கிணைந்த பயிலும்
திட்டம் செயல்படுத்தப்படும்.
- பள்ளிகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
- நலிவுற்ற
மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் பயில
வழங்கப்படும் ஒதுக்கீடு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
உயர்கல்வி மேம்பாடு :
- புதிய கல்லூரிகள் தேவைக்கேற்ப துவங்கப்படுவதுடன், அனைத்து கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
- கல்லூரிகளில் கல்வித் தரம் உயர்த்தப்படும்.
- பல்கலைக்கழகங்கள் மேக கணினியம் (ஊடடிரன ஊடிஅயீரவiபே) மூலம் இணைக்கப்பட்டு, மாணாக்கர்கள் கல்வித் திறன் உயர வழிவகை செய்யப்படும்.
- தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்கள்
விடுமுறை காலங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கான பயிற்சிகள் பெற நடவடிக்கை
எடுக்கப்படும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...