Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கூவி... கூவி விக்கிறாங்க!எம்.பில்., பட்டம் ரூ. 2 லட்சம் எம்.ஏ., தேர்வுக்கு ரூ.1700

          மதுரை காமராஜ் பல்கலை மாலை நேர கல்லுாரி மற்றும் தொலைநிலைக்கல்வி மையங்களில் எம்.பில்., மற்றும் எம்.ஏ., பட்டம் வழங்குவதில் லட்சக்கணக்கான ரூபாய் பேரம் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்திற்கு உட்பட்டு தமிழகத்தில் 26 மையங்கள், வெளி மாநிலங்களில் 190 மையங்கள் உள்ளன.

திண்டுக்கல், பழநி, தேனி, பெரியகுளத்தில் மாலை நேரக் கல்லுாரிகளும் உள்ளன.சில மையங்களில் பல்கலை அனுமதியை விட அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்ப்பதும், எம்.பில்., பட்டங்களுக்கு ரூ. 2 லட்சம் வரை 'பேரம்' நடத்துவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.குறி வைக்கப்படும் ஆசிரியர்கள் முதுகலை முடித்த ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெறுவதற்காக, எம்.பில்., படிக்கஆர்வம் காட்டுவர். இதனால் தேனி மையத்தில் ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் படிக்கின்றனர். அவர்களில் பலருக்குஎம்.பில்., பட்டம் வழங்க ரூ.2 லட்சம் வரை 'பேரம்' பேசப்படுகிறது.

இம்மையத்தில் கடந்த நவம்பரில், 400 பேர் எம்.பில்., தேர்வு எழுதி தோல்வி அடைந்தனர். அவர்கள் அனைவரும் பிப்ரவரியில் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து தேர்ச்சி அடைந்த 'அதிசயமும்' நடந்தது. இதுகுறித்து உயர்கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இரண்டு விடைத்தாள் மோசடி தேனி தொலைநிலைக் கல்வி மையத்தில் ஒரு மாணவி, ஒரே தேர்வுக்கு இரண்டு விடைத்தாள்எழுதினார். இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.சில மையங்களில் மாணவர்களுக்கு வழங்கிய மாற்றுச் சான்றிதழில் (டி.சி.,) இயக்குனருக்கு பதில் வேறு ஒருவரின் கையெழுத்து இருந்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித் துறை செயலர் அபூர்வாவுக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.

பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:

பல மையங்கள், சிண்டிகேட் ஒப்புதலின்றி பல்கலை அனுமதித்ததை விட, அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்து வசூலில் இறங்கியுள்ளன. தேனி உட்பட சில மையங்களில் தேர்வின்போது,பணம் பெற்றுக்கொண்டு மாணவர்களை தேர்வில் 'காப்பி' அடிக்க வைப்பது உட்பட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளன. எம்.ஏ., தேர்வில் 'காப்பி' அடிக்க, ஒரு பாடத்திற்கு ரூ.1700 என 'விலை' நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பல்கலையில் சிலருக்கு 'அனைத்து கவனிப்பும்' நடக்கிறது.துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. செயலர் அபூர்வாவும் பல்கலை நிர்வாகம் மீது அதிகம் கவனம் செலுத்துவதில்லை. இதனால் முக்கிய பொறுப்பில் உள்ள சிலரின் துணையுடன், தொலைநிலைக் கல்வி மையங்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive