தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள
அதிமுக, மீண்டும் ஆட்சியைத்தக்க வைத்துள்ளது.தமிழக அரசியல் வரலாற்றில்,
1984ம் ஆண்டு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். முதல் முறையாக சட்டப்பேரவைத்
தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தார்.
அதன்பிறகு எந்த வொரு கட்சியும் அந்த மகத்தான சாதனையை
செய்யவில்லை.இந்த நிலையில், 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், 234
தொகுதிகளிலும், அதிமுக என்ற ஒரே கட்சிச் சின்னத்தில் வேட்பாளர்களை
நிறுத்தி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மகத்தானதொரு வெற்றியைப் பெற்று,
எம்.ஜி.ஆரின் சாதனையை மீண்டும் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.எப்போதும்
இல்லாத வகையில் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கடுமையான போட்டி நிலவியது.
பெரிய அளவில் மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக - தமாகா என்ற புதிய கூட்டணி உருவானது.பாஜக தனியாகவும், முதல்வர் வேட்பாளர் அறிவிப்போடு மாற்றம் முன்னேற்றம் என்ற முழக்கத்தோடு பாமகவும் தேர்தல் களத்தில் குதித்தன.இருமுனை.. மும்முனை.. அல்ல சற்றேறக்குறைய 6 முனைப் போட்டிகள் நிலவியது. வாக்குகள் பிரியும், தொகுதிகளில் இழுபறி நிலவும், தொங்கு சட்டப்பேரவை அமையும் என்றெல்லாம் அரசியல் ஆர்வலர்கள் கணித்திருந்தனர்.
அனைவரது கணிப்பையும் பொய்யாக்கும் விதத்தில், பெரும்பான்மையான இடங்களில் அதிமுக கைப்பற்றி 6வது முறையாக தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க உள்ளார்.இந்த மகத்தான சாதனையைப் பெற பாடுபாட்ட தொண்டர்களுக்கும், மகத்தான தீர்ப்பை அளித்த மக்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா தனது வெற்றியை தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...