சென்னை
கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கல்வி இயக்குனர் விமலா,
மருத்துவ படிப்புக்களுக்கான விண்ணப்பங்களை நாளை முதல் ஜூன் 6 ம் தேதி மாலை
வரை ஆன்லைனில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் 7 ம் தேதி மாலை வரை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும்.
ஜூன்
17 ம் தேதி மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூன்
20ல் முதல் கட்ட கவுன்சிலிங்கும், ஜூலை 18 ல் இரண்டாம் கட்ட
கவுன்சிலிங்கும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். விண்ணப்பங்களை www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...