தென்மேற்கு வங்கக்கடலில் இலங் கைக்கு அருகே நாளை (மே 14) குறைந்த
காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி, அடுத்த 2 நாட்க ளில் அது
வலுவடையும்.
வெப்பச் சலனம் காரணமாக மே 15, 16 தே திகளில் தென்
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலைஆய்வு
மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகில் நாளை (மே 14) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும். அடுத்த இரு நாட்களில் (மே 16) இது அதே இடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும்போதுதான் அதனால் எந்த அளவுக்கு மழைப் பொழிவு இருக்கும் என்பதைக் கூற முடியும்.கடந்த 24 மணி நேரத்தைப் பெ ாருத்தவரை வெப்பச் சலனம் காரண மாக தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங் களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை (மே 13) வட தமிழகத்தில் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 60 மில்லி மீட்டர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆகிய இடங்களில் தலா 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.நாகர்கோவில், பெரம்பலூர், பு துக்கோட்டை மாவட்டம் பெருங்க ளூர், தேனி மாவட்டம் பெரியாறு, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் தலா 40 மில்லி மீட்டர், உடுமலைப் பேட்டை, கோவை மாவட்டம் சூலூர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம், செங்கோட்டை, தேனி மாவட்டம் கூடலூர், பெரியகுளம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருச்சி மாவட்டம்முசிறி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், கந்தர்வக்கோட் டை, கோவை ஆகிய இடங்களில் தலா 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.வெப்பநிலையைப் பொருத்த வரை நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
வெப்பச் சலனம் காரணமாக மே 14 ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். மே 15,16 தேதிகளில் ராமநாதபுரம் , திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி, சிவகங்கை, விரு துநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.சென்னையைப் பொருத்தவரை மே 13, 14 தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...