டி.இ.டி., (தொடக்க கல்வி பட்டய தேர்வு) எழுத தனித் தேர்வர்கள் வரும் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது
.புதுச்சேரி லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனமுதல்வர் மூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தொடக்க கல்வி பட்டய தேர்வு (டி.இ.டி.,) ஜூன் மாதம் நடக்கிறது. இத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள், 'Google-ல் சென்று, Address barல் 218.248.44.57/diet என டைப் செய்து, விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.இணைய தளத்தின் பக்கம் 1 முதல் 4 வரை அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து, அதன்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.தேர்வரின் தகுதி மற் றும் அறிவுரைகளை பின்பற்றி, பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன், ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப் பெண் சான்றிதழ்களின் நகலை இணைத்து, புதுச்சேரி லாஸ்பேட்டை கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், கம்ப்யூட்டர் புகைப்பட கருவிகள் மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்துள்ளதால் அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்த பின் அங்கேயே தேர்வு கட்டணம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 14ம் தேதி மாலை 5:00 மணி வரை சமர்ப்பிக்கலாம். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...