ராமநாதபுரத்தில் 14 வயதிற்குட்பட்டோருக்கான
கோடை கால இலவச ஹாக்கி பயிற்சி முகாம் மே 12ல் துவங்குகிறது.
ஹாக்கி யூனிட்
ஆப் தமிழ்நாடு மாநில தலைவர் செல்லத்துரை அப்துல்லா கூறியதாவது: ராமநாதபுரம்
மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் 14 வயதிற்கு உட்பட ஆண்கள், பெண்களுக்கு மே
12 முதல் மே 28 வரை காலை 6 மணி, மாலை 4 மணிக்கு கோடை கால இலவச ஹாக்கி
பயிற்சி அளிக்கப்படுகிறது. முகாமில் ஹாக்கி விளையாட்டின் அனைத்து நுட்பங்கள் சொல்லி தரப்படுகிறது.
வேலுமாணிக்கம் சர்வதேச ஹாக்கி மைதானத்தில்
நடக்கும் முகாமில் பங்கேற்க விரும்புவோர் 96551 81239 என்ற அலைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...