முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னையில்
மே 12-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
முதுநிலை, முதுநிலை பட்டயம், ஆறு ஆண்டுகள்
நரம்பியல் அறுவைச் சிகிச்சை, முதுநிலை பல் மருத்துவம்
ஆகியவற்றில்2016-18-ஆம் கல்வியாண்டுக்கு தமிழக அரசு ஒதுக்கீட்டு
இடங்களுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் நடைபெற்றது.
அரசு கல்லூரி இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 854 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் 751 இடங்கள் நிரம்பின.முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 89 இடங்கள், 14 முதுநிலை பல் மருத்துவ இடங்கள் என மொத்தம் 103 காலியிடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு மே 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெறும்.
முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்காதவர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று இடம் ஒதுக்கப்பட்டு, குறிப்பிட்ட கல்லூரியில் சேராதவர்கள் அல்லது கல்லூரியில் சேர்ந்து இடைநிறுத்தம் செய்தவர்கள் இதில் பங்கேற்க இயலாது என்று தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...