தொகுதிகளில், ரகசிய பட்டுவாடா துவக்கிவிட்ட நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும்
நியமிக்கப்பட்டுள்ள, 20 மண்டலக் குழுக்கள், 12ம் தேதி முதல் பறக்கும்
படையாக மாறி, அதிரடி சோதனைகளில் ஈடுபட வேண்டும் என, தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டுள்ளது.
தமிழக தேர்தல் களத்தில், இம்முறை பல முனைப் போட்டி நிலவு கிறது. எந்த கட்சிக்கும், தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலை உள்ளதாக, கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
ஆட்சியைப் பிடிப்பதில், பிரதான கட்சிகளான அ.தி.மு.க., - தி.மு.க., இடையே, ஒன்றிரண்டு சதவீத ஓட்டு வித்தியாசம் மட்டுமே உள்ளது. இந்த இடைவெளியை, பணத்தின் மூலம் சரிக்கட்ட, இரண்டு கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
மூன்று பறக்கும் படை: தேர்தல் கமிஷன் கண்காணிப்பை மீறி, இரு கட்சிகளும், பணத்தை கீழ்மட்ட அளவில் கொண்டு போய் சேர்த்து
விட்டன. சென்னையில், சில தொகுதிகளில், முதல் கட்டமாக, 300 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களில், முழுவீச்சில் பணம் வினியோகம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை முறியடிக்க, தேர்தல் கமிஷனும் தயாராகி வருகிறது. தேர்தல் கமிஷன் சார்பில்,அனைத்து தொகுதிகளிலும், தலா, மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன. இவர்கள், தற்போது வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், ஒவ்வொரு தேர்தலிலும், ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல, தொகுதிக்கு, 20 மண்டலக் குழுக்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு குழு கட்டுப்பாட்டிலும், ஏழு முதல், 10 ஓட்டுச்சாவடிகள் வரை இருக்கும். இக்குழுவினர், ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், தங்கள் பணிகளை துவக்குவர்.
அதேபோல், இந்த தேர்தலுக்கும், தொகுதிக்கு, 20 மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் துணை தாசில்தார் தலைமையில், மூன்று அரசு ஊழியர்கள், ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ஒரு மைக்ரோபார்வையாளர் இடம்பெற்றுள்ளனர்.
கலெக்டர்களுக்கு உத்தரவு: பணவினியோகத்தை தடுக்க, மண்டலக் குழுவினர், 12ம் தேதி முதல் களம் இறக்கப்படுகின்றனர். அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்படும் பகுதியில் ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி
ராஜேஷ் லக்கானி கூறியதாவது: மண்டல குழுவினர், 12ம் தேதி முதல் பறக்கும் படையாகச் செயல்படுவர். அவர்கள், பணம் கொடுப்பதாக புகார் வரும் இடங்களுக்கு, உடனடியாகச் சென்று சோதனை மேற்கொள்வர்.
பணம் கொடுப்பவர்களை பிடித்து, போலீசில் ஒப்படைப்பர். பணம் வினியோகத்தை தடுக்க, அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும்போது, பிடிபடும் நபர்களை, உடனடியாக கைது செய்து, சிறை யில் அடைக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பண வினியோகம் நடைபெறாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...