தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், 15ல் துவங்கி ஏப்ரல், 13ல் முடிந்தது.
10.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள், நாளை மறுநாள் வெளியாக உள்ளன. இரு தினங்கள் கழித்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கானஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது.இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வு வினாத்தாள்கள் எளிமையாக இருந்தன.
ஆனால், பாடங்களின் உள்பகுதியிலிருந்து பல கேள்விகள்இடம் பெற்றதால், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் போன்றபாடங்களில், 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை குறையலாம். மொழி பாடங்களில் சென்டம் வழங்க, மேலதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என, விடைத்தாள் திருத்தத்தின் போது, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. எனவே, மொழி பாடங்களிலும் சென்டம் பெறுவோர் எண்ணிக்கை குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...