பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதால், '104' சேவை மையத்தில்
மாணவர்கள், பெற்றோருக்கு இன்றும், நாளையும் சிறப்பு ஆலோசனை
வழங்கப்படுகிறது.இதுகுறித்து, சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ்
கூறியதாவது:
பொதுவாக,
தேர்வில் மதிப்பெண் குறைவு, தோல்வி காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளாகி
இருப்பர். இந்த நேரத்தில் பெற்றோர் திட்டுவது, மாணவர்களிடம் விபரீத
எண்ணங்களை ஏற்படுத்தி விடும். பெற்றோர் விழிப்போடு இருக்க வேண்டும். ஆறுதல்
படுத்துங்கள்; முடியாவிட்டால், ஒரு முறை, '104'ஐ அழையுங்கள்; உளவியல்
ரீதியாக, இன்றும், நாளையும் சிறப்பு ஆலோசனைகளை தருகிறோம்.இது, நல்ல பலன்
தரும். இதற்காக, கூடுதலாக உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் ஆலோசனை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...