தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்காததால், பல மாவட்டங்களில் பிரச்னை ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஓட்டுச்சாவடி மையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். இதற்காக, 4.97 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தேர்தல் பணி குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
நாளை அனைவருக்கும் தேர்தல் பணி ஒதுக்கப்படும்; மே, 15 பிற்பகல், 2:00 மணிக்கு, அனைவரும் அவர்களுக்கான ஓட்டுச்சாவடி மையம் சென்று கையெழுத்திட வேண்டும்.
தேர்தல் பணிக்கு செல்வோருக்கு, தபால் ஓட்டுகாக அவர்களின் ஓட்டு விவரங்கள் குறித்த, 'விண்ணப்ப எண் 12' பெறப்பட்டது. இதையடுத்து, அனைவருக்கும் ஓட்டுச்சீட்டு வழங்கி, தபால் ஓட்டுகளை பெற வேண்டும்.
ஆனால், விண்ணப்பம் அளித்தும், 50 சதவீதம் பேருக்கு ஓட்டுச்சீட்டு மட்டும் வரவில்லை. தேர்தல் துறை அதிகாரிகள், கல்வித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த பிரச்னையால், 100 சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்கு எட்ட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...