Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கிராமத்து இளைஞர்: 10 ஆண்டில் 7 அரசு பதவிகளை கடந்து முன்னேறியவர்

இளம்பகவத்
         கல்லூரி செல்லாமலேயே பட்டப்படிப்பை அஞ்சல் வழியிலேயே படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ளார் கிராமத்து இளைஞர் ஒருவர்.
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள சோழகன் குடிகாடு என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பகவத் என்ற 34 வயது இளைஞர்தான் அந்த பெருமைக்குச் சொந்தக்காரர்.
சோழகன் குடிகாடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்ற பின் பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தமிழ்வழியில் படித் தார். 1998-ம் ஆண்டு பிளஸ் 2 படித்துக்கொண்டிருந்த போது கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த அவரது தந்தை கந்தசாமி திடீரென மரணம் அடைந்தார். குடும்பம் நிலைகுலைந்து போனது.
இளம்பகவத்தால் கல்லூரிக்குச் சென்று படிக்க இயலவில்லை. தந்தை அரசு ஊழியர் என்பதால் அவரது மறைவுக்குப் பின் வாரிசு வேலைக்காக முயற்சி செய்தார். 1998 முதல் 2005-ம் ஆண்டு வரை இதற்காக அரசு அலுவலகங்களுக்கு நடை யாய் நடந்ததுதான் மிச்சம். வேலை கிடைக்கவில்லை. இதற்கிடையே, 2001-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ (வரலாறு) படித்து பட்டம் பெற்றார்.
வாரிசு வேலைக்காக நடத்திய நீண்ட போராட்டத்தில் வெறுத்துப்போன இளம்பகவத் இனிமேல் இந்த வாரிசு வேலைக்கு முயற்சி செய்ய மாட்டேன். போட்டித்தேர்வெழுதி அரசு வேலையில் சேருவேன் என்று தனக்குள் ஒரு சபதம் எடுத்துக்கொண்டார். அதற்கான முயற்சியிலும் இறங்கினார். கடந்த 2007-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வெழுதி வெற்றிபெற்று காவல்துறை அமைச்சுப்பணியில் இளநிலை உதவியாளராக பணி யில் சேர்ந்தார்.
அடுத்த 6 மாதத்தில் குரூப்-2 தேர்வெழுதி சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர் ஆனார். மீண்டும் குரூப்-2 தேர்வெழுதி உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். இன்னும் மேல்நிலைக்குச் செல்ல வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டே இருந்தார். 2005-ல் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி நேர்முகத்தேர்வு வரை சென்றார். அடுத்த ஆண்டும் இதேநிலைதான்.
இதற்கிடையே, 2010-ல் குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்ற அவருக்கு இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணி கிடைத்தது. 2011-ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆனார். ஒருபுறம் ஐஏஎஸ் தேர்வையும் எழுதி வந்தார்.
நேர்முகத்தேர்வு வரை சென்று விடுவார். நுனியில் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவார். ஆனாலும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார். முயற்சிகள் தோற்கவில்லை. 2014-ல் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று ஐஆர்எஸ் (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது. இதற்கிடையே, குரூப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்று போலீஸ் டிஎஸ்பி பணியும் கிடைத்தது.
6 மாதங்கள் டிஎஸ்பி பயிற்சியில் இருந்த அவர் அதன்பிறகு அரியானா மாநிலத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆப் கஸ்டம்ஸ், எக்சைஸ், நார்காட்டிக்ஸ் மையத் தில் ஐஆர்எஸ் அதிகாரியாக பயிற்சியில் சேர்ந்தார். அரசு பணியில் மிக உயர்ந்த பணியாக கருதப்படும் ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசையால் கடந்த ஆண்டு மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வெழுதினார். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், தேர்வில் வெற்றிபெற்றார். அகில இந்திய அளவில் அவருக்கு 117-வது ரேங்க் கிடைத்துள்ளது. அவர் சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழில் வெற்றிபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ஐஏஎஸ் தேர்வு அனு பவம் குறித்து இளம்பகவத் கூறும் போது, “வாரிசு வேலைக்காக அரசு அலுவலகங்களில் நடை யாய் நடந்து சந்தித்த கசப்பான அனுபவங்கள்தான் அரசுத்துறை யில் உயர் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தை என்னுள் ஏற்படுத்தின. ஏழை சொல் அம்பலம் ஏறவேண்டுமெனில் ஏழையே அம்பலம் ஏற வேண்டும். ஏறிய பின்னரும் அவன் ஏழை படும்பாட்டினை உரத்துச் சொல்ல வேண்டும். பட்டிக்காட் டானாக உள்ளே செல்பவன் பட்டின மயக்கங்களில் விழாமல் கிராமத்தானின் துயரங்களைப் பேச வேண்டும்” என்கிறார் உணர்ச்சிப் பெருக்குடன்.
“நான் பிளஸ்-2 வரை தமிழ்வழியில்தான் படித்தேன். என்னால் ஐஏஎஸ் தேர்வை ஆங்கிலத்தில் எழுதி வெற்றிபெற முடியும். என் மேல் எனக்கு நம்பிக்கை இருந்தது. எனினும் தமிழ்வழியில் தேர்வெழுதினால் அதை விட இன்னும் சிறப்பாக எழுத முடியும் என்று கருதினேன். நமது சிந்தனை தாய்மொழி யில்தான் இருக்கும். எனவே, தமிழ்வழியில் தேர்வெழுத முடிவெடுத்தேன்.
நான் இதுவரை 5 முறை நேர்முகத்தேர்வுக்கு சென்றி ருக்கிறேன். ஆனாலும், நேர்முகத் தேர்வை ஆங்கிலத்தில் தான் எதிர்கொண்டேன்” என்று தன்னம்பிக்கை மிளிர கூறுகிறார் இளம்பகவத். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகமாக திகழ்கிறார் இந்த கிராமத்து கலெக்டர்.




13 Comments:

  1. You are an example person.. Keep going sir.. Congrats

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் ! தம்பி.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ! தம்பி.

    ReplyDelete
  4. Please guide others,congrats.

    ReplyDelete
  5. You are example person. Keep going Sir... Congratulation

    ReplyDelete
  6. YOUR ACHIEVMENTS TO BE CONTINUED FOR THE WELFARE OF VILLAGERS

    ReplyDelete
  7. Such a great man I cannot express in words

    ReplyDelete
  8. congratulation sir.I PRAY,You have to get more and more success in your life .please concern on the needed people...

    ReplyDelete
  9. Mangayarkarasi p5/15/2016 10:55 am

    Great work ....hearty congrats ...3 words (vida) muyarchi ........payirchi ......vuyarchi.....

    ReplyDelete
  10. Nice very nice hardwork always rock

    ReplyDelete
  11. Another Sahayam in the making

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive