சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்இறுதியானவுடன்,
அவர்களது பெயர்-சின்னம் குறித்த தகவல்கள் வாக்காளர்களின் செல்லிடப்பேசிக்கு
குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி வைக்கப்படும்.இதுகுறித்து
சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி வியாழக்கிழமை
நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்யத் தேவையில்லை. இதுகுறித்த வழிகாட்டுதலை அனைத்து மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தேர்தல் குறித்த புகார்களைக் கண்காணித்து அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க இரண்டு மாவட்டங்களுக்கு ஒரு மாவட்ட வருவாய் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
பணம் பதுக்கல், வாக்குக்கு பணம் அளிப்பது போன்றவை தொடர்பாக இதுவரை 516-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனைகளில், 10 இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.செல்லிடப்பேசியில் தகவல்: வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் மே 2-இல் வெளியிடப்படும்.
இதன் பின், இரண்டு நாள்களில் தேர்தல் துறையிடம் பதிவுசெய்து வைத்துள்ள 2 கோடி வாக்காளர்களின் செல்லிடப்பேசி எண்களுக்கு வேட்பாளர் பெயர், கட்சி குறித்த விவரம் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...