Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

FIRE !!! FIRE...

தீ பற்றிய தகவல்கள்!!
தீ பற்றி கொண்டால் என்ன செய்ய வேண்டும்?
         நெருப்பு / தீ பயன்படுத்தாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம் . வீடுகளில் அல்லது பணிபுரியும் இடங்களில் பல விபத்துகள் நெருப்பு மூலம் ஏற்படுகிறது . அப்படி ஏற்ப்பட்டால் என்ன எப்படி அந்த நெருப்பை அணைக்கவேண்டும் என்பது தான் இந்த கட்டுரையின் சாராம்சம்.
நெருப்பு என்றால் என்ன .?
வேகமாக ஆக்சிஜனேற்றம் பெற்று வெப்பத்தையும் ஒளியையும் வெளியிடும் தொடர் வேதி வினை தான் நெருப்பு என்று அழைக்கப்படுகிறது . நெருப்பு என்பது
நான்கு காரணிகள் உள்ளடக்கியது .
வெப்பம்
ஆக்சிஜென்
எரிபொருள்
தொடர்வினை
மேற்கண்ட இந்த நான்கு காரணிகள் தான் நெருப்பை உண்டாக்குகின்றன . அதனால் நெருப்பினால் ஆபத்துகள் உண்டாகும் போது இந்த காரணிகளை நாம் கட்டுபடுத்தினால் நெருப்பை கட்டுப்படுத்தலாம் .
இந்த நெருப்பு 4 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது . அவையாவன
Class A நெருப்பு
Class B நெருப்பு
Class C நெருப்பு
Class D நெருப்பு
Class A தீ / நெருப்பு :
சாதாரணமாக பேப்பர் , மரம் , துணி போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது . இந்த நெருப்பை அணைப்பதற்கு அந்த நெருப்பின் வெப்பத்தை தணிக்கும் வகையில் நெருப்பின் மீது நன்கு தண்ணீர் ஊற்றவேண்டும் . தண்ணீர் வெப்பம் என்ற காரணியை எரிபொருளில் இருந்து நீக்கி விடுவதால் தொடர்வினை கட்டுக்குள் வருகிறது . எனவே நெருப்பு அணைக்கப்படுகிறது . இந்த மாதிரி நெருப்பை அணைப்பதற்கு Class A தீ அனைப்பான்களை ( Class A Fire Extinguishers ) பயன்படுத்தலாம் .
Class B தீ / நெருப்பு :
எண்ணெய் மற்றும் கியாஸ் போன்றவற்றில் ஏற்ப்படும் தீ / நெருப்பு இந்த வகையை சேர்ந்தது . இந்த மாதிரி நெருப்பு ஏற்ப்படும் பொழுது சில சமயங்களில் முதல வகுப்பு தீயை அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தினது போல அநேகர் செய்கின்றனர் . ஆனால் அது தவறான நடவடிக்கை
இந்த மாதிரி தருணங்களில் தண்ணீரை பயன்படுத்தினால் தண்ணீரை விட அடர்த்தி குறைந்த எண்ணெய் தண்ணீரின் மேல் வந்து விடும் காரணத்தாலும் , வெப்பத்தினால் தண்ணீர் ( H2O ) பிரிந்து ஆக்சிஜென் மூலக்கூறுகள் பிரிவதினாலும் , நெருப்பு அதிகமாகும் . எனவே இந்த வகையான நெருப்பை அணைக்க CO2 கியாஸ் அல்லது சோப்பு நுரை அதிக அளவில் பயன்படுத்தினால் , நெருப்பிற்கு தேவையான ஆக்சிஜென் கட்டுப்படுத்தப்பட்டு தொடர்வினை நிறுத்தப்படும்
Class C தீ / நெருப்பு :
மின்சார தீ இந்த வகையில் வருகிறது . இப்படி தீ ஏற்ப்பட்டால் முதலாவது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் . அதற்கு பிறகு எரிகிற பொருளை பொருத்து அது Class A தீயா அல்லாத B தீயா எனபதை அறிந்து அதற்கேற்ற தீ அனைப்பானை பயன்படுத்த வேண்டும் .
Class D தீ / நெருப்பு :
தொழிற்சாலைகளில் உள்ள சோடியம் , பொட்டாசியம் , டைட்டானியம் போன்ற உலோகங்களில் ஏற்ப்படும் தீ இந்த வகையை சேர்ந்தது . சோடியம் க்ளோரைட் எனப்படும் உப்பு மற்றும் Dry Chemical Powder போன்ற அனைப்பான்களை பயன்படுத்தலாம் .
பொதுவாக தீ பிடித்தால் நீங்கள் கீழ்க்கண்ட காரியங்களை கடைபிடியுங்கள்
பதட்டப்படாதீர்கள் பதறிய காரியம் சிதறும்
தீ தீ என்று சத்தமிட்டு அனைவரையும் உஷார் செய்யுங்கள்.
தீ அணைக்க கூடிய அளவில் இருந்தால் அணைக்க முயற்சி செய்யுங்கள்.
பெரும் தீ என்றால் தீ அணைப்பு நிலையத்திற்கு அழைப்பு கொடுத்து விட்டு அவர்கள் அந்த இடத்தை அடைவதற்கு தேவையான் வசதிகளை செய்து கொடுக்கலாம்.
உயிருக்கு கேடு என்றால் தயவு செய்து இடத்தை காலி செய்யுங்கள் . உங்கள் உயிருக்கு முன் உடமைகள் ஒன்றும் அல்ல.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive