30-வது ஆண்டு துர்முகி
தமிழ் ஆண்டுகள் அறுபதில் 30வது ஆண்டு துர்முகி. இந்த ஆண்டுக்குரிய ராஜாவாக
சுக்கிரனும், மந்திரியாக புதனும் ஆட்சி செய்வார்கள். இதனால் விவசாயம்
சிறக்கும். நாடு சுபிட்சம் பெறும்.
கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்கும். மக்கள்
ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வர். எல்லா உயிர்களும் குறைவின்றி வாழும்.
பெருமழை பெய்யும் என்று பஞ்சாங்கங்களில் கூறப்பட்டுள்ளது.
வெற்றி தரும் வெள்ளி
புத்தாண்டின் ராஜா சுக்கிரன். அவருக்குரிய கிழமை வெள்ளி. எனவே இந்த ஆண்டு
முழுவதும் வெள்ளிக்கிழமை விரதமிருந்து முருகனை வணங்கினால் வெற்றி மேல்
வெற்றி வந்து சேரும். விரதம் இருப்பவர்கள் வெள்ளியன்று முருகன்
கோவிலுக்குச் செல்ல வேண்டும். 'ஓம் சரவணபவ' என்னும் மந்திரத்தை 108 முறை
ஜெபிக்க வேண்டும். கந்தசஷ்டி கவசம், சண்முக கவசம், ஸ்கந்தகுரு கவசம்
பாடல்களைப் படிக்க வேண்டும். எளிய உணவு சாப்பிடலாம்.
தடை காக்கும் தாமரை
மன்மத ஆண்டின் ராஜா சுக்கிரன். இவருக்குரிய அதிதேவதையான லட்சுமியை
வழிபட்டால் வாழ்வு சிறக்கும். பெருமாள் கோவில்களில் உள்ள தாயாருக்கு
செந்தாமரை மலர் சாத்தி வழிபட்டால் தடை நீங்கும். புதிய முயற்சி வெற்றி
பெறும். சேமிக்கும் விதத்தில் வருமானம் உயரும்.
வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் (காலை 6.00- 7.00 மணி) தாயாருக்கு
தீபமேற்றினால் திருமண யோகம் கைகூடும். வெள்ளியன்று சிவபெருமானுக்கு வில்வ
அர்ச்சனை செய்வதும் நன்மையைத் தரும்.
குருபெயர்ச்சி மட்டுமே
சனி இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறையும், ராகு-, கேது ஒன்றரை ஆண்டுக்கு ஒரு
முறையும், குரு ஆண்டுக்கு ஒரு முறையும் ராசி விட்டு ராசி பெயர்ச்சியாகும்.
துர்முகி ஆண்டில்
(2016 ஏப்ரல்14- - 2017 ஏப்ரல்13) குரு மட்டுமே பெயர்ச்சியாகிறது. ஆடி 18,
(ஆகஸ்ட்2) காலை 9.27 மணிக்கு சிம்மத்தில் இருந்து கன்னி ராசிக்கு குரு
பெயர்ச்சியாகிறார். இந்த ஆண்டில் சூரிய, சந்திர கிரகணம் இல்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...