தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்க முடிவு
செய்துள்ளனர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில், ஜூனில்
நடக்கவுள்ள பத்தாவது மாநில மாநாட்டிற்கு தயாராக, நான்கு திசைகளிலும் ஆயத்த
மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மேற்கு மண்டல ஆயத்த மாநாடு,
சேலம் தலைவாசலில் உள்ள அரிமா சங்க கட்டடத்தில், நேற்று முன்தினம் நடந்தது.
அதில், ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு, அ.தி.மு.க., செவிசாய்க்கவில்லை. சங்க பிரதிநிதிகளை சந்திக்க கூட மறுக்கிறது. அதை மாற்ற, அரசு ஆசிரியர்களின் கோரிக்கைகளைநிறைவேற்றும் வகையில், பல திட்டங்களை, தேர்தல் அறிக்கையாக தி.மு.க., கொடுத்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டம் நீக்கப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்; ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளது.
அதனால், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என, முடிவு செய்தனர்.மன்ற பொது செயலர் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது: அரசு பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன், ஊதிய முரண்பாடுகளும் களையப்படும் என கலைஞர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.இந்த தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்து, கட்சியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என மன்ற உறுப்பினர்களை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...