தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணி வாய்ப்பு குறைந்ததாலும், பி.எட்.,
படிப்பு இரண்டு ஆண்டாக மாற்றியதாலும், அப்படிப்பின் மீதான ஆர்வம் வெகுவாக
சரிந்துள்ளது.
மாணவர் சேர்க்கை நடத்த முடியாத பல பி.எட்., கல்லுாரிகள்
நடப்பு கல்வியாண்டுடன் மூடுவிழா நடத்தவும் தயாராகி வருகின்றன.தமிழ்நாடு
கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும், 726 பி.எட்.,
கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில், ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழக அரசு பள்ளிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட்., முடித்தவர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட்., படிப்பதில் மாணவ, மாணவியரிடையே ஆர்வம்அதிகமாக இருந்தது. அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை விடவும் அதிகம் கொடுத்து, படிக்கவும் போட்டிகள் இருந்தது.ஆனால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஆண்டுக்காண்டு உபரிஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதனால், கடந்த இரு ஆண்டுகளாக புதிதாக ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்படவில்லை. மேலும் எதிர்காலத்தில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கே வேலை உத்தரவாதம் இல்லாத நிலை காணப்படுகிறது.இந்நிலையில், கடந்த கல்வியாண்டில், பி.எட்., படிப்பு ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் கூடுதல் பாடங்கள், கூடுதல் கல்விக்கட்டணம் உள்ளிட்டவைகளால், மாணவர்களிடையே ஆர்வம் வெகுவாக சரிந்துள்ளது. கடந்த கல்வியாண்டிலேயே,60 சதவீத இடங்களே நிரம்பின.
வரும் கல்வியாண்டில், 40 சதவீத இடங்கள் கூட நிரப்ப முடியாத நிலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால், பி.எட்., கல்லுாரிகளை லாபகரமாக நடத்துவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதனால், பல கல்லுாரி நிறுவனங்கள் பி.எட்., கல்லுாரிகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, கலை அறிவியல் மற்றும் வேறு சில பாடங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...