அமெரிக்காவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, சென்னையில் உள்ள
அமெரிக்க துாதரகம் பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளது.
இது தொடர்பாக, அமெரிக்க
துாதரக அதிகாரிகள் கூறியதாவது:அமெரிக்காவில் கல்வி பெற விரும்புவோர், 'எப்
1' விசா பெற வேண்டும். அது தொடர்பான நடைமுறைகளை அறிந்து கொள்ள, மே, 13ல்,
சென்னை, அமெரிக்க துாதரகத்தில் உள்ள நுாலகத்தில், மதியம், 2:30 மணி முதல்,
மாலை, 4:00 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
அதற்காக, http:/bit.ly/EducationUSAChennaiPDO என்ற இணையதள முகவரியில்
முன்பதிவு செய்யவேண்டும். மேலும், ஜூன், 3 மாலை, 4:00 மணி முதல், 5:00 மணி
வரை, bit.ly/educationusawebinar என்ற இணையதளத்தில், 'ஆன்லைன்' வகுப்பு
நடைபெற உள்ளது. மாணவர்கள், ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் போன்ற
புகைப்படத்துடன் கூடிய ஆவணங்கள் அல்லது பள்ளி, கல்லுாரி அடையாள அட்டையை
கொண்டுவர வேண்டும்.நேர்காணலுக்கு அழைக்கப்படுவோர், அழைக்கப்பட்ட
நேரத்துக்கு, 15 நிமிடங்களுக்கு முன்னதாக வரக்கூடாது. எந்தெந்த பொருட்களை,
சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகத்துக்கு கொண்டு வரக்கூடாது என்பதை,
www.ustraveldocs.com/in/innivsecurityinfo.asp அல்லது goo.gl/piYcPP என்ற
இணையதளத்தில் பார்த்து அறியலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Your link is not opening for registering
ReplyDelete