தேர்தல் பணியில் பணியாளர்களாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் நலனுக்காக
ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு நடமாடும் மருத்துவக் குழு
அமைக்கப்படுகிறது.
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது வெயில்
காரணமாகப் பல ஆசிரியர்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். இதைத்
தவிர்க்கும் வகையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்க ஆசிரியர்கள்
கோரினர்.
இதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்களின் நலனுக்காக நடமாடும் மருத்துவக்குழு அமைக்கப்படுகிறது.இக்குழுவில் தலா ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் என மூவர் இருப்பர்.
ஒவ்வொரு தொகுதியிலும் இரண்டு நடமாடும் மருத்துவக் குழுக்கள் தயராக இருக்கும். தேர்தல் பணி ஆசிரியர்களின் உடல் நலத்தில் பிரச்னை வந்தால்,தேர்தல் அலுவலரை அணுகினால் அவர் மூலம் நடமாடும் மருத்துவக் குழு சம்பந்தப்பட்ட வாக்குப் பதிவு மையத்திற்கு வரும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...