தானியங்கி முகப்பு விளக்கு: இரவு நேரம் சாலையில் செல்லும் போது, எல்லா வாகனங்களிலும் பயன்படுத்தப்படுவது முகப்பு விளக்குகளே. சில நேரங்களில் எதிர், எதிரே வரும் வாகனங்களில் ஒரே சமயம் எரியும் முகப்பு விளக்குகளால், சாலையின் வாகன விபத்தும் ஏற்படுகிறது.
இதை தடுக்க இறுதியாண்டு மாணவர்கள் ஜெரின் மத்யூ, கோபிநாத், பால்பாண்டி, ராமச்சந்திரன் ஆகியோர், 'தானாக வெளிச்சத்தை குறைத்தும்,
அதிகரிக்கவும் செய்யும் 'தானியங்கி முகப்பு விளக்கு' கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: எதிர் வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு அதிக வெளிச்சத்துடன் எரிந்தால், இக்கருவி பொருத்தப்பட்டுள்ள வாகனத்தின் முகப்பு விளக்கின் வெளிச்சம் குறையும். இதனால் ரோடு தெளிவாக தெரியும். இதற்கென 'சென்சார் கருவி', 'மைக்ரோ கண்ட்ரோலர்' உடன் பொருத்தப்பட்டுள்ளது.
எதிர் திசையில் சாலையை கடக்க ரோட்டோரம் யாரேனும் நின்று, ஓட்டுனர் கவனிக்கவில்லை என்றாலோ, வாகனம் இன்னொரு வாகனத்தை உரசி செல்லும் அளவிற்கு நெருங்கி சென்றாலோ தானாகவே வாகனத்தில் ஒலி எழுப்பும் 'பஸ்சர்' பொருத்தப்பட்டுள்ளது.இந்த கருவியை கண்டுபிடிக்க ரூ.ஆயிரம் மட்டுமே செலவாது இதை பொருத்துவதின் மூலம் இரவு நேரங்களில் பெருமளவு வாகன விபத்தை தடுக்கலாம், என்றனர்.
சோலார் டிரெட்மில் சைக்கிள்
இந்த சைக்கிள் பின்புறம் 10 'வாட்ஸ்' அளவிலான சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளது. 12 'வோல்ட்' திறன் உடைய 4 பேட்டரிகள், 2 'ஸ்பேர் கியர்', சைக்கிள் பின் புறத்தில் மோட்டார் பொருத்திய டயர், கீழ்ப்புறம் கால் வைத்து கொள்ள 'டிரெட் மில்' அமைப்புடைய பட்டைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் உருவாக்க செலவு ரூ.20 ஆயிரம் ஆனது.
உருவாக்கிய மாணவர்கள் பாலாஜி, பரணிதரன், கணேசன், மெர்லின் சில்வர்ஸ்டார் கூறியதாவது: சூரிய ஒளிபடும் படி சைக்கிளை 4 மணி நேரம் நிறுத்த வேண்டும். சைக்கிளுடன் இணைக்கப்பட்டுள்ள பேட்டரி சார்ஜ் ஆகி, 20 முதல் 30 கி.மீ., துாரம் வரை டூவீலர் மாதிரி ஒட்டி செல்லலாம்.
சைக்கிளில் அமர்ந்தபடியே கீழே சைக்கிளின் வேகத்திற்கு ஏற்ப சுழலும் 'டிரெட்மில்'லில் நடப்பது போல நடக்கவும் செய்யலாம். சாதாரண 'டிரெட்மில்'லை வீட்டில் இருந்தபடியே பயன்படுத்துவோம். ஆனால், இந்த சைக்கிளை வெளியிடங்களுக்கு மோட்டார் வாகனம் போலவும் பயன்படுத்தலாம். அதேசமயம் வெளியிடத்திற்கும் 'டிரெட்மில்'லை கொண்டு செல்வது போல செல்லலாம். இதனால் ஒரே நேரத்தில் இரு பயன்களும் நமக்கு கிடைக்கும்.பேட்டரியில் சார்ஜ் குறைந்துவிட்டால், சைக்கிளில் உள்ள 'டிரெட்மில்'லை அழுத்தி சிறிது துாரம் வெயிலில் சென்றால், பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்,என்றனர்.--
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...