வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்கும் பணி நிறைவு பெற்றது. பெயர் சேர்க்காதவர்கள், ஓட்டு போட முடியாது' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்
.சென்னையில் உள்ள, தென் மண்டலங்களுக்கான, பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் தயாரிக்கப்பட்ட, 'தமிழ்நாடு சட்டசபை தேர்தல் - 2016 கையேட்டை' தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி வெளியிட்டார். பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் முத்துக்குமார் பெற்றுக் கொண்டார்.
தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பேசியதாவது:தொலைக்காட்சிகளில், ஒரு வேட்பாளரின் பிரசாரத்தை, நாள் முழுவதும் காண்பித்து, அந்த வேட்பாளர் பணம் செலுத்தாவிட்டாலும், அதற்குரிய செலவுத் தொகை, அந்த வேட்பாளர் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.
ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக, 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என, 14ம் தேதியில் இருந்து, விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி உள்ளோம். வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற கோரி, 6.84 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பிக்கும் தேதி முடிந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:52 மணிக்கு, 58 வயது நபர் போன் செய்து, 'தன் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியுமா' என, கேட்டார். 'இன்னும் எட்டு நிமிடங்களில், 'ஆன்லைனில்' பதிவு செய்தால், சேர்க்க முடியும்' என தெரிவித்தேன்.அடுத்து அவர், 12:10 மணிக்கு போன் செய்து, 'பெயரை ஆன்லைனில் பதிவு செய்து விட்டேன். இம்முறை ஓட்டு போட முடியுமா' என கேட்டார். 'கண்டிப்பாக முடியும்' எனக் கூறினேன். இரவோடு ஆன்லைனில் பதிவு செய்யும் பணி முடிந்தது. இனி, தேர்தல் முடிந்த பிறகுதான், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பிக்க முடியும்.
சென்னை, கோயம்பேடு பஸ் நிலையத்தில், கண்காணிப்பு கேமரா மூலம், பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அதேபோல், ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பதற்றமான தொகுதி மற்றும் வி.ஐ.பி., தொகுதிகளில், பறக்கும் படை எண்ணிக்கை, மூன்றில் இருந்து, ஐந்தாக உயர்த்தப்பட உள்ளது. வெயிலில் பொதுக்கூட்டம் நடத்தும்
கட்சிகள், வாக்காளர்களை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...