இன்ஜி., கல்லுாரிகளின் பாடப்பிரிவு மற்றும் கட்டண விவரங்கள், அண்ணா பல்கலையின் இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில், 570 இன்ஜி., கல்லுாரிகள்,
அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள், அகில இந்திய
தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்றால்
மட்டுமே அவற்றில் மாணவர் சேர்க்கை நடத்த முடியும். இந்த ஆண்டுக்கான
அங்கீகார பட்டியல் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், பி.இ., - பி.டெக்., மற்றும்
பி.ஆர்க்., படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப பதிவு
துவங்கியுள்ளது. நேற்று வரை, அண்ணா பல்கலையின் இணையதளத்தில், ஒரு லட்சத்து,
4,000 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 54 ஆயிரம் பேர் மட்டுமே
விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, 'ஆன்லைனில்' விண்ணப்பத்தை அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையில், கல்லுாரிகளின் விவரங்களை
மாணவர் மற்றும் பெற்றோர் அறிந்து கொள்ளும் வகையில், அண்ணா பல்கலையின்
https://www.annauniv.edu/tnea2016/ இணையதளத்தில் விரிவாக
வெளியிடப்பட்டுள்ளன.
இதில், கல்லுாரிகள் பற்றி முழு விவரம்,
என்னென்ன பாடப்பிரிவுகள் உள்ளன; அவை எப்போது துவங்கப்பட்டன; விடுதி
கட்டணம், உணவு கட்டணம் போன்ற பல விவரங்களும் இந்த பட்டியலில் இடம்
பெற்றுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...