தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:
தற்போது ஆன்லைனில் விண்ணப்பிப்போருக்கு மட்டும், வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. விண்ணப்பம் நேரடியாக கொடுத்தால் தாமதமாகும். புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு விண்ணப்பித்தால், புதிய வாக்காளர் அடையாள அட்டை வர, குறைந்தது, 15 நாட்களாகும்.
வாக்காளர் மேற்கொள்ள விண்ணப்பித்த மாற்றங்கள், முறையாக மேற்கொள்ளப்பட்ட விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும். அதன்பின் அவர்கள், வாக்காளர் சேவை மையத்திற்கு சென்று, புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
எஸ்.எம்.எஸ்., வருவதற்கு முன் சென்றால், பழைய வாக்காளர் அடையாள அட்டை விவரம் அடிப்படையில் புதிய அட்டை வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...