விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள் இரும்புச் சத்து மாத்திரைகள் உட்கொள்வதால் பிரசவ கால இறப்பு பெருமளவு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்தார்.
ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர், துணை சுகாதார நிலைய அலுவலர்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று 12 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவியர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். இதனால், மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்படுவதை தடுப்பதுடன், தொற்று நோய் எளிதில் ஏற்படாமலும் தடுக்க முடிகிறது. கடந்த மார்ச் முதல் நவம்பர் வரை 78 ஆயிரத்து 689 மாணவ, மாணவிகளுக்கு 7 லட்சத்து 8 ஆயிரத்து 201 இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கர்ப்பிணி தாய்மார்களை ரத்த சோகை நோய்களில் இருந்து பாதுகாக்க இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதனால், பிரசவ காலத்தில் தாய்மார்களின் இருப்பு விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் இலவச நாப்கின் வழங்கப்படு வதால் சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...