இளநிலை, முதுநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கு அனைத்துக்
கல்லூரிகளிலும், தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு
உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
2012-ம் ஆண்டில் இளநிலை
மருத்துவப் படிப்புகளுக்கும், 2013-ம் ஆண்டில் முதுநிலை மருத்துவப்
படிப்புகளுக்கும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான அறிவிக்கையை
மத்திய அரசு வெளியிட்டது.
ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆணை செல்லாது என்று 2013-ம் ஆண்டில் தீர்ப்பு அளித்தது. பொது நுழைவுத் தேர்வுகள் குறித்து முடிவு எடுக்க இந்தியமருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்பதைக் காரணம் காட்டி உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.இதனிடையே இளநிலை, முதுநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கு அனைத்துக் கல்லூரிகளிலும், தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை இந்திய மருத்துவ கவுன்சில் முன் வைத்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனாலும், பிற அமைச்சகங்களின் ஆலோசனைகளுக்குப் பின் இதில் இறுதி முடிவு எடுக்கப் போவதாகக் கூறப்பட்டு வந்தது.இந்நிலையில், மருத்துவ கல்லூரிகளில் மாணவ-மாணவியர் சேர்க்கைக்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் வழங்கியிருந்து இடைக்கால தடையை எதிர்த்து மத்திய அரசும், மருத்துவ கவுன்சிலும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.இந்த சீராய்வு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மருத்துவ பொது நுழைவுத்தேர்வுக்கான இடைக்கால தடையை ரத்து செய்து, பொது நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...