பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், தமிழ்
மற்றும் ஆங்கில பாடத்துக்கு, 'சென்டம்' வழங்க புதிய நிபந்தனைகள்
விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும்,
40க்கும் மேற்பட்ட மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று
முன்தினம் துவங்கியது. இந்த ஆண்டு முதல், விடைத்தாள் திருத்தத்தில் மொழி
பாடங்களுக்கு மட்டும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, தமிழ்,
ஆங்கிலம் மற்றும் பிறமொழி பாடங்களுக்கு, விடைத்தாள் திருத்தத்தின் போது,
'சென்டம்' மதிப்பெண் வந்தால், அதை, இரண்டாவது மறு மதிப்பீடு செய்ய வேண்டும்
என உத்தரவிடப்பட்டுள்ளது.
மொழி பாட விடைத்தாளில், 100 மதிப்பெண்
வந்தால், அந்த மாணவரின் விடைத்தாளை, மதிப்பெண் கணக்கீட்டாளர், முதன்மை
திருத்துனர் ஆகியோர் சரிபார்க்க வேண்டும். பின், அந்த விடைத்தாளை முகாம்
அதிகாரியிடம் காட்டி, அதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனருக்கு தெரிவிக்க
வேண்டும்.பின், தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவுப்படி, மற்றொரு முதன்மை
மதிப்பீட்டாளர் மற்றும் உதவி மதிப்பீட்டாளர் மூலம், மறு மதிப்பீடு மற்றும்
ஆய்வு செய்ய வேண்டும். இதில், அந்த மதிப்பெண் மாறாவிட்டால் மட்டுமே,
'சென்டம்' வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள்
அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறும்போது, 'இதுபோன்ற
நிபந்தனைகள் மூலம், மாணவர்களுக்கு மொழி பாடத்தில் மதிப்பெண் குறைய வாய்ப்பு
உள்ளது. அதேநேரம், சரியான விடைத்தாளுக்கு சரியான மதிப்பெண் தருவது தேவையான
நடவடிக்கை' என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...