வெம்பாக்கம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா 32 குழந்தைகள் கண்டறியப்பட்டு, பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் கூடுதல் முதன்மை
கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவின்பேரில், வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு
உள்பட்ட 64 பஞ்சாயத்துக்களைத் சேர்ந்த 231 குடியிருப்புகளில் 6-14 வயதுள்ள
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
வெம்பாக்கம் ஒன்றிய உதவித் திட்ட அலுவலர்
பி.சுப்ரமணியன் மேற்பார்வையில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கு.தேன்மொழி
தலைமையில் நடைபெற்ற இந்தப் பணியின்போது 6-14 வயதுள்ள 32 குழந்தைகள்
பள்ளிக்கு செல்லாமல் இடையில் நின்றுள்ளது கண்டறியப்பட்டு, அந்தக்
குழந்தைகளை வரும் ஜூன் மாதத்தில் அருகாமையில் உள்ள பள்ளியில் சேர்த்திட
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர்கள்
வி.உதயசங்கர், எம்.சண்முகம், ஆசிரியர் பயிற்றுநர்கள் எம்.உமா,
டி.இராமஜெயம், என்.பிர்லா, ஏ.ஆர்த்தி, வி.கோவிந்தராஜ், எஸ்.கார்த்திகேயன்,
எம்.அண்ணாசாமி, என்.ரேவதி, பி.சுரேஷ் ஆகியோர் கணக்கெடுப்பு பணியில்
ஈடுப்பட்டு
இருந்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...