உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில்,ஆசிரியர்களுக்கு அலுவலக பணிகளை
வழங்க ஆணையிடும் அதிகாரம் இல்லை என்று,தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்
வாயிலாக,தொடக்க கல்வி துணை இயக்குனர் தகவல் அளித்துள்ளார்.
ஒவ்வொரு
மாவட்டங்களும்,ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு தொடக்க கல்வித்துறை சார்ந்த
பொறுப்புகள் உதவி தொடக்க கல்வி அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
அந்தந்த ஒன்றியங்களில் அமைந்துள்ள பள்ளிகள் இவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படும். ஆசிரியர்களுக்கும்,அலுவலர்களுக்கும் ஊதியம் போடுதல்,நலத்திட்ட வினியோகம் கண்காணிப்பு,பிற ஆய்வு பணிகள் உள்ளிட்ட பல பணிச்சுமைகள்உள்ளன.பெரும்பாலான ஒன்றியங்களில் உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் அலுவலர்கள் பற்றாக்குறை உள்ளது.
இந்நிலையில்,பள்ளி ஆசிரியர்களை தொடர்ந்து அலுவல பணிகளில் ஈடுபடுத்துவதாகவும்,பல்வேறு காரியங்களுக்காக பணம் வசூலிப்பதாகவும் தொடர் புகார்கள் குவிந்துவருகின்றன.தற்போது,தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆசிரியர்களை அலுவலக பணிகளுக்கு பயன்படுத்த,உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும்,காரணமின்றி பணம் வசூல் செய்யக்கூடாது என்றும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...