சத்துணவு மையங்களுக்கு, சமையல் காஸ் இணைப்பு வழங்கி
நவீனப்படுத்தினாலும், போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாததால், விறகு அடுப்பு
கலாசாரமே தொடர்கிறது. இதனால், ஊழியர்களின் சுகாதாரம் மீண்டும்
கேள்விக்குறியாகியுள்ளது.தமிழகத்திலுள்ள, சத்துணவு மையங்களுக்கு சொந்த
கட்டடம் கட்டுதல், பழுது பார்த்தல், குழந்தைகள் எளிதாக பயன்படுத்தக்கூடிய
வகையில் கழிப்பறைகள் அமைத்தல், மின்இணைப்பு வசதிகள் ஏற்படுத்துதல்,
எடைபார்க்கும் கருவிகள், சுகாதார உபகரணங்கள் வழங்குவது ஒவ்வொரு ஆண்டும்
மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், ஆறு மாதம் முதல் 36 மாதங்களுக்கு உட்பட்ட, 16.6லட்சம் குழந்தைகளுக்கு கூடுதல் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. இரண்டு முதல், ஐந்து வயதுக்கு உட்பட்ட, 11.55 லட்சம் குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட சத்தான உணவு வழங்கப்படுகிறது.மொத்தம், 42 ஆயிரத்து, 490 மதிய உணவு மையங்கள் உள்ளன. இதில், 6,257 மையங்களுக்கு மட்டும் சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 36 ஆயிரத்து, 233 மையங்களுக்கு காஸ் இணைப்பு அல்லது மரத்துகள் எரியூட்டி பயன்படுத்தும் வகையில் நீராவி சமையல் அடுப்பு அமைக்க, 83 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டது. மத்திய சத்துணவு திட்டத்துக்காக, 1,412.88 கோடி ரூபாய்செலவிடப்படுகிறது.இந்நிலையில், 36 ஆயிரத்து, 362 சத்துணவு மையங்களுக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. ஒரு இணைப்புக்கு, 22 ஆயிரத்து, 350 ரூபாய் வீதம், 81 கோடியே, 26 லட்சத்து, 90 ஆயிரத்து, 700 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இந்த நிதியில், கோவை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான சத்துணவு மையங்களுக்கு சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மையங்களில், இணைப்பு வழங்கியபோது அடுப்புடன் வழங்கப்பட்ட காஸ் சிலிண்டர் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு, காஸ் சிலிண்டர் எடுக்கப்படாமல், விறகு அடுப்பு கலாசாரமே தொடர்கிறது.கோவை மாவட்ட சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இன்னாசிமுத்து கூறியதாவது:தற்போது, சாப்பாடு, பருப்பு சாம்பார் சமைக்க ஒரு நாளுக்கு ஒரு மாணவனுக்கு, 40 பைசா வழங்கப்படுகிறது. கலவை சாதம் சமைக்க, ஒரு நாளுக்கு, ஒரு மாணவனுக்கு, 48 பைசா வழங்கப்படுகிறது. 100 மாணவர்களுக்கு சமைக்க, 20 நாட்களுக்கு, 800 ரூபாய் விறகுக்கு வழங்கப்படுகிறது.இந்த நிதி பற்றாக்குறையால், விறகுக்கு பதிலாக, தென்னை மட்டை வாங்கி பயன்படுத்துகிறோம். சமையல் காஸ் இணைப்பு வழங்கப்பட்டாலும், விறகுக்கு வழங்கும் தொகை உயர்த்தப்படவில்லை.சமையல் காஸ் பயன்படுத்தினால், ஒரு வாரத்துக்கு ஒரு சிலிண்டர் தேவைப்படும். விறகுக்கு வழங்கும் தொகையில், சிலிண்டர் எடுக்க முடியாது. முதல் சிலிண்டருக்கு பிறகு,விறகு அடுப்பையே பயன்படுத்துகிறோம். இதுபற்றி அரசுக்குபல கட்டங்களில் தெரிவித்தும், பலனில்லை. நவீனத்தை புகுத்தும் போது, அதற்கேற்ப நிதி ஒதுக்க வேண்டும்.இவ்வாறு, இன்னாசிமுத்து தெரிவித்தார்.
நிதி வீணாகிறதே!
தகவல் உரிமை சட்டத்தில் இத்தகவல் பெற்றுள்ள ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், ''சத்துணவு கூடங்களுக்கு, சமையல் காஸ் இணைப்பு வழங்கி, மேம்படுத்த வேண்டும். திட்டத்தை செயல்படுத்தும் அரசு, கண்காணிப்பு பணியிலும் ஈடுபட வேண்டும். பல பகுதிகளில் சமையல் காஸ் பயன்படுத்தாமல் முடக்கப்பட்டு, விறகு அடுப்பு பயன்படுத்துவதை பார்த்ததால், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல்வேறு தகவல்களைகேட்டு பெற்றேன். அரசு நிதி வீணாகாமல், சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...