வெற்றி தோல்விகளை ஏற்கிற மனப்பக்குவம் இருந்தால் வாழ்க்கை வசமாகும்' என திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி மைய இயக்குனர் சர்மா தெரிவித்தார்.
மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய விஞ்ஞானி சர்மா பேசியதாவது: 1979ல் வெறும் 40 கிலோவில்
'எஸ்.எல்.வி.,' ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்தது. 1980ல் அதைவிட கூடுதல் சக்தி பெற்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு வெற்றியடைந்தது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாம் எங்களோடு பணியாற்றினார். தோல்விக்கான முழுப்பொறுப்பையும் அவரே ஏற்றார். வெற்றி அடைந்த போது வெற்றிக்கான காரணங்களை பிறரிடம் கூறும்படிச் செய்தார்.
இன்று பொறியியல் பட்டங்கள் பெறும் நீங்கள் வாழ்வில் பல்வேறு நிலைகளை அடைவீர்கள். ஆனால், வெற்றி, தோல்விக்கான இடைவெளியில் துவண்டு விடாமல் இரண்டையும் ஏற்கும் மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை உங்கள் வசமாகும், என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...