Home »
» தேர்தல் பயிற்சிக்கென ஒரு ஆன்ட்ராய்டு செயலி
தேர்தல்
பணியில் ஈடுபடவிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு
உதவும் வகையில் ஒரு ஆன்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவின்
போது பல்வேறு நிலைகளில் பணிபுரியும் ( Zonal Officer, Presiding Officer,
Polling Officer I, Polling Officer II , Polling Officer III மற்றும் BLO )
அலுவலர்களுக்கு பயனளிக்கும் தகவல்கள், பயிற்சிக் கட்டகங்கள், Manuals,
வீடியோ இணைப்புகள், வினாக்கள் மற்றும் பிற விரிவான தகவல்களை உள்ளடக்கிய
செயலியாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தஞ்சை
மாவட்ட தேர்தல் அலுவலர் (ஆட்சியர்) அவர்கள் வெளியிட்டுள்ள “Thanjavur
Election" என்ற இச்செயலி தஞ்சை மாவட்டம் மட்டுமன்றி, அனைவருக்கும்
பயன்படும் வகையில் உள்ளது. நீங்கள் தேர்தல் பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளீர்களா? நீங்கள் எந்த மாவட்டமாக இருந்தாலும், அவசியம்
தேர்தல் நாள் வரையிலும் உங்கள் செல்பேசியில் இருக்க வேண்டிய செயலி இது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...