‘தி இந்து எஜுகேஷன் பிளஸ் உயர் கல்வி வழிகாட்டி கண்காட்சி-2016’ சென்னையில்
நேற்று தொடங்கியது. இன்றும் நடைபெறும் இக்கண் காட்சியில் பிரபல கல்வி
நிறுவனங் களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
பிளஸ் 2 படித்து முடிக்கும் மாண வர்கள் மேற்கொண்டு உயர்கல்வி மற்றும்
வேலைவாய்ப்புக்காக நிபு ணர்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக ‘தி இந்து எஜு
கேஷன் பிளஸ்’ சார்பில் ஆண்டு தோறும் உயர்கல்வி வழிகாட்டி கண்காட்சி
நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான கண்காட்சி சென்னை நந்தம்பாக் கத்தில் உள்ள வர்த்தக
மையத்தில் நேற்று தொடங்கியது. விஐடி பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடைபெறும்
இக்கண்காட்சியை விஐடி துணைத் தலைவர் சேகர் விஸ்வநாதன், காக்னிசன்ட் நிறு
வனத்தின் மனித ஆற்றல் மேம்பாட்டு துறையின் துணைத் தலைவர் சதீஷ் ஜெயராமன்,
‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் அசோசியேட் எடிட்டர் ஷாலினி அருண், ராஜலஷ்மி
கல்விக் குழுமத்தின் தலைவர் தங்கம் மேகநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். ‘தி இந்து’ நிறுவனத்தின் மூத்த பொது
மேலாளர் திவாகர் வரவேற்றார்.
காக்னிசன்ட் நிறுவன மனித ஆற் றல் மேம்பாட்டு துறை துணைத் தலைவர் சதீஷ்
ஜெயராமன் பேசும் போது, ‘‘தொழில்நுட்ப புரட்சி காரண மாக நாடு அனைத்து
துறைகளிலும் தற்போது அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எனவே அதை
தேடிக் கண்டுபிடித்து அடைய 100 சதவீதம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பிரபல கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸ் பள்ளிப் படிப்பை பாதியில்
கைவிட்டவர். சார்லி சாப்ளினை ஹாலிவுட் திரையுலகம் நிராகரித்தது. ஆனால்,
அவர்கள் எல்லாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றனர். புதிய விஷயங்களை
கற்றுக்கொள்ள மாணவர்கள் தங்க ளது கண்களையும், காதுகளையும் எப்போதும்
திறந்து வைத்திருக்க வேண்டும்’’ என்றார்.
விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் சேகர் விஸ்வ நாதன் பேசும்போது,
‘‘இன்ஜினீயர், டாக்டர், அக்கவுன்டன்ட் என எந்தத் துறையை நீங்கள்
தேர்ந்தெடுத் தாலும் அத்துறையில் நீங்கள் வல்லுநர்களாக திகழ வேண்டும்.
இதற்கு மாணவர்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண் டும். குறுக்கு வழியில்
செல்லக் கூடாது. மறைந்த முன்னாள் குடிய ரசுத் தலைவர் அப்துல்கலாமின்
வாழ்க்கை இதற்கு ஓர் உதாரணம். சாதாரண ஏழை மீனவ குடும்பத்தில் பிறந்த அவர்
தனது கடுமையான உழைப்பின் மூலம் நாட்டின் உயர்ந்த பதவியை அடைந்தார்.
எனவே மாணவர்கள் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும் அத்துறையில் சிறந்து
விளங்க ஓர் லட்சியத்தை உருவாக்கி அதை அடைய தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
மேலும் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் அளவுக்கு ஆங்கில மொழி புலமையை
வளர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியின் அசோசியேட் பார்ட்னர்களாக ராஜலஷ்மி கல்விக் குழுமம், பாரத்
பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம், கற்பக விநாயகா கல்விக் குழுமம்,
மார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் அண்டு ஆர்க்கிடெக்சர், ஸ்வர்ணபூமி, கல்வி
இணையதளமான ஷிக்சா, ஈவென்ட் மேனேஜராக ஐ ஆட்ஸ் அண்டு ஈவென்ட்ஸ், பிஎஸ்என்எல்
நிறுவனம், மிடாஸ், போதி, ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஆகி யவை உள்ளன.
இக்கண்காட்சியில் அமைக்கப் பட்டுள்ள ‘தி இந்து’ நாளிதழின் அரங்கில் உள்ள
புத்தகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படு கிறது. பங்கேற்பதற்கு வசதியாக
கோயம்பேடு, கிண்டி ஆகிய இடங் களில் இருந்து வாகன வசதிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...