தேர்தல் தேதி அறிவிச்சா,புதுத்திட்டம் எதுவும் அறிவிக்க வேண்டாம்னு தான
சொன்னாங்க,ஆனா பள்ளிக்கு போகவேஆப்புவைச்சுட்டாங்களே என புலம்புகின்றனர்
விளையாட்டு விடுதியில் சேர காத்திருக்கும் மாணவர்கள். தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாநிலம் முழுவதும்,
28மாவட்டங்களில் விளையாட்டு விடுதிகள் உள்ளன.ஒவ்வொரு
மாவட்டத்திலும்,குறிப்பிட்ட விளையாட்டுகள் தேர்வு
செய்யப்பட்டு,மாணவர்களுக்கு அதற்கான பயிற்சியளிக்கப்படுகிறது. இம்மாணவர்கள்
விளையாட்டு விடுதிகளில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.6, 7, 8,
9மற்றும் பிளஸ்1வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது.
மாவட்டம்,மண்டலம்,மாநில அளவில் தேர்வுகள் நடத்தப்பட்டு,தகுதி அடிப்படையில்
மாணவர்கள் தேர்வாகின்றனர்.
இவ்வாறு தேர்வாகும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் நாளுக்கு, 250ரூபாய் வீதம் செலவு செய்யப்படுவதுடன்,விடுதிக்கு அருகிலுள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். நடப்பாண்டில்,தேர்வுக்கான விண்ணப்பங்கள் மாவட்டம் வாரியாக வினியோகிக்கப்பட்டது.இம்மாதம் மாநில அளவிலான தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் காரணமாக,இத்தேர்வுகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மே மாதம் முதலே, 6முதல்9வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இப்போது,விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பள்ளியில் சேர்வதா அல்லது,இத்தேர்வு நடக்கும் வரை காத்திருப்பதா என தெரியாமல் விழிக்கின்றனர்.
பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில்,தற்போது முதலே சேர்க்கை ஆரம்பமாகிவிட்டது. பல ஆயிரம் ரூபாய் கணக்கில் கட்டணம் செலுத்தி,பின்பு,விடுதியில் இடம் கிடைத்தாலும்தொகையை திரும்ப பெறுவதில் சிக்கலான நிலையே ஏற்படும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...