மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக்கல்வி மாணவர்களுக்கு மே 25ல்
துவங்கும்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 2ம் தேதி வரை கால நீட்டிப்பு
செய்யப்பட்டுள்ளது.பல்கலை கூடுதல் தேர்வாணையர் பி.டி.மனோகரன்
தெரிவித்துள்ளதாவது: இளங்கலை மற்றும்
பி.எட்., தேர்வுகள் மே 25 முதலும், முதுகலை மற்றும் எம்.எல்.ஐ.எஸ்.சி.,
பட்டப் படிப்புகளுக்கு ஜூன் 1, சான்றிதழ், பட்டயம், எம்.சி.ஏ., எம்.பி.ஏ.,
மற்றும் திறந்தவெளி தொடக்க மற்றும் அடிப்படை நிலைப் படிப்புகளுக்கான தேர்வு
ஜூன் 6ல் துவங்குகின்றன. இதற்காக அபராதத்துடன் ஏப்.,22 வரை
விண்ணப்பிக்கலாம் என்பதை மே 2ம் தேதி வரை நீட்டிப்பு
செய்யப்பட்டுள்ளது.மேலும், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, முதுகலை
பட்டப்படிப்புகளுக்கு ஜூன் 1ல் துவங்கும் தேர்வுகள், 4ம் தேதிக்கு
தள்ளிவைக்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...