இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து,தொடக்க கல்வி இயக்குனர் தாக்கல் செய்தமேல்முறையீட்டு மனுவை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாகை மாவட்டம், செம்பனார்கோவிலில் உள்ள, அரசு உதவி பெறும்பள்ளியில், சரவணபாபுஎன்பவர், இடைநிலைஆசிரியராக, 2012 பிப்., 20ல் நியமிக்கப்பட்டார்; அன்றே பணியிலும் சேர்ந்து விட்டார்.
மறுப்பு
அன்று முதல், பணிக்கான ஒப்புதல் வழங்கும்படி, நாகை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிக்கு பரிந்துரைக்கப்பட்டது.ஆனால், ஒப்புதல் வழங்க, தொடக்க கல்வி அதிகாரி மறுத்து விட்டார்.பஞ்சாயத்து ஒன்றியம் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில், பெண் ஆசிரியர், ஆண் ஆசிரியர் விகிதாசாரம், 75:25 என்ற அளவில்இருக்க வேண்டும். அந்தவிகிதாசாரப்படி இல்லாததால், தொடக்க கல்விஅதிகாரி ஒப்புதல் வழங்கமறுத்துள்ளார்.குறையில்லைஇதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், பள்ளிநிர்வாகம் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சரவண பாபுவின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி, தொடக்க கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, தொடக்க கல்வி இயக்குனர், நாகை மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, உதவி தொடக்க கல்வி அதிகாரி, மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.மனுவை விசாரித்த,நீதிபதிகள் அக்னிஹோத்ரி, வேணுகோபால் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. பள்ளி நிர்வாகம் சார்பில், வழக்கறிஞர் எஸ்.என்.ரவிச்சந்திரன் ஆஜரானார்.'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:'பெண்களுக்கான பணிஇடங்களில், தகுந்த பெண்தேர்வர் கிடைக்கவில்லை என்றால், ஆண் தேர்வரை நியமித்து கொள்ளலாம்' என, ஒரு வழக்கில்,உயர் நீதிமன்றம் கருத்துதெரிவித்துள்ளது.
இந்தவழக்கை பொறுத்த வரை, தனிநீதிபதியின் உத்தரவில் எந்த குறைபாடும் இல்லை. எனவே, மேல்முறையீட்டுமனு தள்ளுபடிசெய்யப்படுகிறது.
இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...