எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், ஆன்
லைன் மூலம், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என முதன்மை கல்வி
அலுவலர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்தாண்டு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 18 ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தேர்வை எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், ஆன் லைனில், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள், www.tndge.in என்ற இணைய தளத்தில் ''ESLC APRIL 2016 EXAMINATION- HALL TICKET''என்ற வாசகத்தை Click செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால், தேர்வு கூட அனுமதி சீட்டு ( ஹால் டிக்கெட்) திரையில் தோன்றும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், ஹால் டிக்கெட் இல்லாமல், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், ஹால் டிக்கெட் குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...