கோடை விடுமுறையை குதூகலமாக கழிக்க நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்திற்கு குழந்தைகளை அழைத்துச்செல்லலாம்.
அங்கு வெளிநாட்டு ( விருந்தாளிகள் ) பறவைகள் உள்ளிட்ட விதவிதமான பறவைகள் குவிந்துள்ளன.சைபீரியா, மங்கோலியா பறவைகள் : திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளத்தில் பறவைகள் சரணாலயம் செசயல்படுகிறது. இங்குள்ள குளத்தில் தண்ணீர் நிறைந்திருப்பதால் செங்கால்நாரை, கூழைக்கடா, நத்தைகொத்திநாரை உள்ளிட்ட பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. கிராமம் முழுவதும் உள்ள கருவேல மரங்கள், முள்மரங்களில் கூடுகட்டி குஞ்சு பொரிக்கத் துவங்கியுள்ளன. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுகள் கட்டியுள்ளன. சைபீரியா, மங்கோலியா போன்ற நாடுகளில் இருந்து பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான் , செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, கொக்குகள், கரண்டி வாயன் என நீர்ப் பறவைகள் கூந்தன் குளத்திற்கு ஆண்டு தோறும் வருகை புரிகின்றன. மொத்தமாக 247 வகையான பறவை இனங்கள் இங்கு கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. வழக்கமாக ஜனவரி மாதத்தில் வரும் பறவைகள் ஆகஸ்ட் மாதம் வரையிலும் இங்கு தங்கிஇனப்பெருக்கம் செய்து தங்கள் குஞ்சுப்பறவைகளுடன் தங்களின் சொந்த ஊர் செல்லும். இந்த ஆண்டு போதுமான மழை பெய்ததாலும், மணிமுத்தாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரினால் குளம் நிரம்பி ரம்மியமாக காட்சியளிப்பதால், பறவைகளுக்கும் சொந்த ஊர் செல்ல மனமில்லாமல் இங்கேயே தங்கியுள்ளன.
கூழைக்கடா , பெலிகன், செங்கால்நாரை குறிப்பாக கூழைக்கடா எனப்படும் பெலிகன், செங்கால்நாரை போன்ற அதிக எடையுள்ள பறவைகள் குளத்தை சுற்றிலும் பறக்கும் போது குட்டி விமானங்கள் வானில் பறப்பது போல கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. இந்த ஆண்டு பறவைகள் உட்கார இடமில்லாதபடி ஊர்முழுவதும் பறவைகள் நிரம்பி காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது . கூந்தன்குளம் கிராமத்தில் 1994 முதல் மக்கள் சரணாலயமாக செயல்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வந்துசெல்கின்றனர்.
பறவைக்காவலர் பால்பாண்டி..!
இங்குள்ள பறவைகள் சசரணாலயத்தை பொதுமக்கள்தான் பாதுகாத்துவருகின்றனர். குறிப்பாக தீபாவளிக்கு இந்த கிராமத்து மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை. தங்கள் வீட்டின் மரத்தில் பறவைகள் இருந்தால் அவற்றை சிரமமாக பார்ப்பதில்லை. விரட்டியடிப்பதில்லை. பறவைகள் வருவதால் தங்கள் ஊர் சுற்றுலா தலமாக மாறியிருப்பதாலும், பறவைகளின் எச்சங்களின் மூலம் வயலில் உற்பத்தி அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இங்கு பல ஆண்டுகளாக பறவைகளின் காவலராக செசயல்பட்டுவரும் உள்ளூரை சேசர்ந்த பால்பாண்டியை பாராட்ட வேண்டும். இவர் இங்கு வரும் பறவைகளை பாதுகாத்துவருகிறார். மரத்தில் கூடுகளில் இருந்து தவறிவிழும் குஞ்சுகளை மீட்டு தமது சொந்த செலவில் மீன் வாங்கி உணவளிக்கிறார். இவரது சேவையை பாராட்டி கேரள அரசு விருது வழங்கியுள்ளது. ஆனால் தமிழக வனத்துறையினரோ அவருக்கு கடந்த 13 மாதங்களாக மாத ஊதியம் வழங்காமல் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த கோடை விடுமுறை சுற்றுலாவிற்கு கூந்தன்குளம் கிராமத்திற்கும் ஒரு விசிட் சென்று வரலாம். நெல்லையில் இருந்து ரெட்டியார்பட்டி, மூலைக்கரைப்பட்டி வழியாக கூந்தன்குளம் சுமார் 35 கி.மீ.,தொலைவில் உள்ளது. அதிகாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், பார்க்கலாம். மாலையில் 4 மணி முதல் இருட்டும் வரையிலும் பார்க்கலாம். நீங்கள் குழந்தைகளுடன், மாணவ, மாணவிகளுடன் செல்வதென்றால் பறவைக்காவலர் பால்பாண்டியிடம் பேசிவிட்டு (மொபைல் எண் 9486205438) சென்றால் அவர் அங்கு வரும் பறவைகள் குறித்து குழந்தைகளுக்குவிளக்கிச்சொல்வார். அந்த ஊரிலேயே சிறிய ஓட்டல் வசதியும் உள்ளது.

very nice information
ReplyDelete