பொதுத்தேர்வு எழுதியதும், முடிவுகள் வருவதற்கு முன்பே, தற்கொலை செய்து
கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது, பெற்றோர் மத்தியில் பீதியை
கிளப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை,
18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதியுள்ளனர். இதில், பிளஸ் 2
தேர்வில், கடந்தாண்டை காட்டிலும், வேதியியல்,விலங்கியல், கணிதம் உள்ளிட்ட
முக்கிய தேர்வுகள் கடினமாக இருந்தன.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும்,
கணிதம், அறிவியல் தேர்வுகளில் எதிர்பாராத விதமாக, கேள்விகள்
இடம்பெற்றிருந்ததால், சென்டம் பெறுவோர் குறைய வாய்ப்புகள் அதிகம்.
கேள்விகள் கடினமாக இருந்ததால், தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே, ஐந்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது, பெற்றோர் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. முன்பு, தேர்வு முடிவுகள் வந்தபின் நடக்கும், தற்கொலை சம்பவங்கள், இந்தாண்டில் தேர்வு எழுதியதும், துவங்கியுள்ளது.
இதற்கு, பாடவாரியாக காலிப்பணியிடம் நிரப்பாமல் இருப்பது, குறிப்பிட்ட கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல், ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தியுள்ள நெருக்கடி என, பல்வேறு முரண்பாடுகள் நீடிப்பதே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும் கல்வியாண்டிலாவது, பள்ளி அளவிலான உளவியல் மையம் அமைக்க, பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், ''அதிக மதிப்பெண்கள் பெறுவதே, தரமான கல்விமுறை என்பதை வலியுறுத்துவது, தமிழகத்தில் மட்டுமே பின்பற்றும், பழமைவாய்ந்த நடைமுறை. இங்கு, செயல்வழி கற்றலுக்கு முக்கியத்துவம் குறைவுதான். குறிப்பிட்ட பாடப்பகுதியில், முக்கிய வினாக்களை படிக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால் தான், மற்ற பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், மாணவர்கள் திணற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.''புரிதலுடன் கூடிய கற்றல் முறையே, உயர்கல்வியில் சாதிக்க வழிவகுக்கும். மேலும், தேர்வுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாவது, மாணவர்களுக்கு உளவியல் ரீதியான, ஆலோசனை வழங்க வேண்டும். படிப்பு தவிர, ஓவியம், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளித்தால், இதுபோன்ற தற்கொலை சம்பவங்கள் குறைய வாய்ப்புகள் அதிகம்,'' என்றார்.
அரசு பள்ளி தலைமையாசிரியர்களிடம் கேட்டபோது, 'காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிந்ததும், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் பட்டியல் பெறுவதற்கு, சிறப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும், சென்டம் இலக்கை அடைய, மாணவர்களை விட, கூடுதல் அழுத்தத்துக்கு ஆட்படுவது ஆசிரியர்கள் தான். மேலும், பெற்றோரின் கூடுதல் திணிப்பும், தேர்வு பயத்துக்கு முக்கிய காரணம். இது களைய, ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களுக்கு, பள்ளி அளவில், சிறப்பு கவுன்சிலிங் வகுப்பு அமைக்கலாம்' என்றனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...