Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சமூக அறிவியலில் 'சென்டம்' எளிது

         பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்ததால், சென்டம் எடுப்பது எளிது என ஆசிரியர்கள் மாணவர்கள் தெரிவித்தனர்.
 
        அவர்கள் கூறியதாவது:ஏ,அழகுராஜகுமாரி, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: சமூக அறிவியல் தேர்வு எல்லா தேர்வுகளை விடவும் எளிமை.
 
                மற்ற தேர்வுகளில் அதிகளவு கேள்விகள் பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டன. ஆனால், இதில் கட்டாய விடை அளிப்பதற்கான 14 ஒரு மார்க் கேள்விகளில் 2 கேள்விகள் மட்டுமே பாடப்புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டன. அதுவும், தங்க இழைப் பயிர் என்றழைக்கப்படுவது எது? என கேட்கப்பட்டது. மிகவும் எளிமையானது. இதற்கு சணல் என முன்கூட்டியே வகுப்பறையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஐந்து மதிப்பெண், 2 மதிப்பெண், மேப் மிகவும் எளிமை. இதனால் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் இம்முறை சென்டம் பெறும் வாய்ப்பு உள்ளது.
ஆர்.சதீஷ் பாபு, முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: காலாண்டு, அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளே பொதுத்தேர்விலும் கேட்கப்பட்டிருந்தன. விடைகளை அடிக்கடி எழுதி பார்த்ததால் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க முடிந்தது. புத்தகத்தில் இருந்தே அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டிருந்ததால் எளிமையாக இருந்தது.
குழப்பமான கேள்விகள் எதுவுமில்லை. கடந்த 5 பொதுத்தேர்வுகளின் வினாக்களுக்கான விடைகளை படித்திருந்தால் சுலபமாக நுாறு மதிப்பெண் எடுக்கலாம். சராசரி மாணவர்கள் 80 மதிப்பெண், நன்றாக படிக்கும் மாணவர்கள் 100 மதிப்பெண் எடுக்கலாம். இம்முறை ஏராளமானோர் சென்டம் எடுப்பது எளிது.
ஏ.அனிதாபானு, சமூக அறிவியல் ஆசிரியை, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: பொதுவாக கேள்விகள் அனைத்தும், எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. ஏற்கனவே பயிற்சி எடுத்த பாடங்களில் இருந்து கேள்விகள் இடம்பெற்றதால் மாணவர்கள் சிரமம் இன்றி தேர்வு எழுதினர். ஐந்து மதிப்பெண்களுக்கான ஆசியா மேப், பத்து மதிப்பெண்களுக்கான இந்தியா மேப் ஆகியவை மிகவும் எளிமை. காலக்கோடு பகுதியில் 1920 முதல் 1940 வரை நடந்த ஐந்து நிகழ்வுகள் கேட்கப்பட்டன. இது வழக்கமாக கேட்கப்படும் கேள்வி என்பதால் எளிதில் விடையளிக்க முடியும். நான்கு ஐந்து மதிப்பெண் கேள்விகளில் 1857ம் ஆண்டு விடுதலை புரட்சி குறித்து எதிர்பார்த்தோம். ஆனால், பாரதியார் குறித்து கேட்கப்பட்டது. இதை சாய்சில் விட்டு விடலாம். வரலாறு, புவியியல், பொருளியல் பகுதி கேள்விகளுக்கு விடையளிக்கலாம். எந்த கேள்வியும் தவறாக கேட்கப்படவில்லை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive