தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், அரசு இ- சேவை மையங்கள் மூலம் வழங்கும் புதியநடைமுறை இன்று தொடங்கியது.
ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. வரும் கல்வியாண்டில் வழங்குவதற்காக 10 கோடி புத்தகங்கள் தயார்நிலையில் உள்ளதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
இந்த புத்தகங்களை தமிழகம் முழுவதும்உள்ள அரசு இ - சேவை மையங்கள் மூலம் மாணவர்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. www.textbookcorp.tn.nic.in/csc என்ற இணையத்தில் மாணவர்களே விண்ணப்பித்து புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...