கடந்த 22-ந்தேதி இது குறித்து மத்திய அரசு வெளியிட்டஅறிவிக்கை பற்றி மத்திய
தகவல் தொழில் நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று விடுத்த
அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தொழில்நுட்பம்
என்பது முற்றிலுமாக மனித வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துக்
கொள்வதற்கானது ஆகும். அதுவும் குறிப்பாக இந்த தொழில் நுட்பம் பெண்களின்
பாதுகாப்புக்காக அமைவது நல்லது. இதை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு (2017)
ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பாதுகாப்பு கருதி அவசரமாக அழைக்கும் ‘பட்டன்’
வசதி இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிற அனைத்து செல்போன்களில் கட்டாயம்
இடம் பெற வேண்டும்.அதன்பிறகு இந்த வசதியில்லாத எந்த செல்போனையும் நாட்டில்
விற்க முடியாது. இதில் பட்டனை அழுத்தும் முறை மிக எளிதாக இருக்க வேண்டும்.
இதேபோல் 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் ‘ஜி.பி.எஸ்.’ என்னும்
இடம் காட்டி வசதியை உள்ளடக்கியதாகவும் கட்டாயம் அந்த செல்போன்கள் இருக்க
வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...