மாணவிகளும், மாணவர்களும் ஒன்றாக
உட்காரவும், நடக்கவும் தடை விதித்து பாகிஸ்தான் பல்கலை., சர்ச்சைக்குரிய
உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.5000 வரை
அபராதம் விதிக்கப்படும் எனவும் பல்கலை., நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் முக்கிய
பகுதியில் அமைந்துள்ளது ஸ்வாத் பல்கலைக்கழகம். பாகிஸ்தான் உயர்கல்வித்துறை
கழகம் வெளியிட்டுள்ள பட்டியலின்படி 2012ம் ஆண்டில் இந்த பல்கலை., 124
ரேங்கில் உள்ளது. இந்த பல்கலை.,யில் தற்போது ஆண், பெண் பேதம் பிரிக்கும்
விதமாக புதிய தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலை., அறிவிப்பு பலகையில்
ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பின்படி, பல்கலை., வளாகத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ
மாணவிகளும் மாணவர்களும் ஒன்றாக உட்காரவோ, நடக்கவோ கூடாது. இந்த உத்தரவை
மீறுபவர்களுக்கு ரூ. 50 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தரவு தொடர்பாக பெற்றோர்களை
அழைத்து, அவசர கூட்டம் ஒன்றையும் பல்கலை., நிர்வாகம் நடத்தி உள்ளது. அதில்
இந்த உத்தரவிற்கு ஒப்புதல் தெரிவித்து, பெற்றோர்களிடம் கையெழுத்தும்
பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்று செய்தி
வெளியிட்டுள்ளது. இதே போன்றதொரு தடை பாகிஸ்தானின் முன்னணி பல்கலை.,களில்
ஒன்றான தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலை.,யிலும்
நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வி பெறுவதற்கு மாணவர்களுக்கு ஏற்ற
தூரத்தில் இருக்கக் கூடிய ஸ்வாத் பல்கலை.,யில் இது போன்ற தடை
விதிக்கப்பட்டுள்ளதால், பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு நிறைந்த இப்பகுதியில்
தொடர்ந்து மாணவர்களும், மாணவிகளும் கல்வியை தொடர்வதில் பல சிக்கல்கள்
எழுந்துள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...