பள்ளிகள் முதல் பல்கலை., வரை கல்வி கட்டமைப்பில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என நிதி ஆயோக் மற்றும் மனிதவள மேம்பாட்டு துறைக்கு பிரதமர் மோடி பரிந்துரை செய்துள்ளார்.
இது தொடர்பாக சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பள்ளி மாணவர்களே ஆசிரியர்களை மதிப்பீடு செய்யும் முறை கொண்டு வரப்பட வேண்டும். பல்கலை.,களிலும் ஆசிரியர் பயிற்சி கொண்டு வரப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் கிரேடு அடிப்படையிலான கல்வி கொண்டு வரப்பட வேண்டும். அதன் மூலம் மாணவர்கள் தரம் பிரிக்கப்பட்டு, சுமாராக படிக்கும் மாணவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றாற் போல் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.
பள்ளிகளில் போலி ஆசிரியர்களை தடுக்க புகைப்படத்துடனான ஆசிரியர் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். இவைகள் ஆதார் திட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை பிரதமர் மோடி முன்வைத்துள்ளதாக மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...