Home »
» சிறப்பு முகாமில் கடவுச்சீட்டு பெற இன்று விண்ணப்பிக்கலாம்!
சிறப்பு
முகாமில் கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) பெறுவதற்காக, இணையதளத்தில்
புதன்கிழமை விண்ணப்பிக்கலாம்.
சென்னை அமைந்தகரை, சாலிகிராமம் ஆகிய இரு
இடங்களில் கடவுச்சீட்டு சிறப்பு முகாம் ஏப்ரல் 9-ஆம் தேதி நடத்தப்படுகிறது.
இந்த
முகாமின் போது 1,500 விண்ணப்பங்களுக்கு முன்அனுமதி வழங்கப்பட்டு
அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். இதற்காக புதன்கிழமை (ஏப்ரல் 6)
பிற்பகல் 2.45 மணியளவில் www.passportindia.gov.in என்ற இணையதளத்தில்
தகவல்களைப் பதிவு செய்து நேரத்தைப் பெற்றவர்கள் மட்டுமே முகாமில் பங்கேற்க
முடியும் என்று மண்டல கடவுச் சீட்டு அதிகாரி கே.பாலமுருகன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...