2016-17ஆம்
கல்வியாண்டில் பி.இ. சேருவதற்கு www.annauniv\tnea2016.edu என்ற இணையதளம்
மூலம் ஆன்-லைன் மூலம் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அண்ணா
பல்கலைக்கழகம் முதல்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி,
வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்யலாம். பிளஸ்-2 தேர்வு முடிவுகள்
வெளியானதற்குப் பிறகு 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
முதல் முறையாக இந்த வசதியை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ளது. இதனால், விண்ணப்ப விநியோகம் கிடையாது.
பிளஸ்-2 மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து -"செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை' என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு 10 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படும். தேவைப்பட்டால் இந்த அவகாசம் நீட்டிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இதுகுறித்து பதிவாளர் கணேசன் கூறியது:
பதிவு செய்யும் முறையில் சந்தேகம் எழும் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில், அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 60 உதவி மையங்கள் செயல்படும். இங்கு சந்தேகங்களை அறிவதோடு, விவரங்களை பதிவையும் செய்து கொள்ள முடியும்.
இதுதவிர, அரசு இ-சேவை மையங்கள் மூலம் விவரங்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்டணம்: கலந்தாய்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பலாம். அல்லது கடன் அட்டை, பற்று அட்டைகள் மூலமாக ஆன்-லைனிலும் கட்டணத்தைச் செலுத்தலாம் என்றார்.
486 இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க வசதிக்காக ஆன்-லைன் விவரங்கள் பதிவை அரசு இ-சேவை மையங்களில் மூலமும் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தலைமைச் செயலகம், மாநகராட்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், கோட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் அமைந்துள்ள மண்டல கடவுச்சீட்டு அலுவலகங்கள் ஆகியவற்றில் 486 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...