காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் தொடு சிகிச்சை மூலம் மூட்டு வலியைக் குணப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.
முதுநிலை நியூரோதெரபி ஆலோசகர் ஏ.கே.ராமன் பங்கேற்று, தொடு சிகிச்சையின் மகத்துவம் குறித்துப் பேசும்போது, நரம்பை தூண்டும் விதத்தில் செய்யப்படும் இந்த சிகிச்சையின் மூலம் கழுத்து வலி உள்ளோர், மூட்டு வலி உள்ளோர் குணமடையமுடியும். ரத்தத்தில் சிகப்பு அணுக்களை அதிகரித்தல், ஆஸ்துமாவை போக்குவது, தொடக்க நிலை புற்றுநோயை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோய்களை நியூரோதெரபி மூலம் குணப்படுத்தமுடியும் என்றார். மேலும், முகாமில் கலந்துகொண்டோரை பரிசோதித்து, நோய் பாதிப்புள்ளோருக்கு ஆலோசனை வழங்கினார்.
முகாமில், ஸ்ரீ கைலாசநாதர் கோயில் தனி அதிகாரி கோவி.ஆசைத்தம்பி, தென் தமிழக சேவா பாரதி மாநில பொதுச் செயலர் டி.சீனிவாசராகவன், ஆரோக்கியம் மாநில ஒருங்கிணைப்பாளர் என்.ஆனந்தபகவதி ஆகியோர் பேசினர். காரைக்கால் சேவா பாரதி பொறுப்பாளர் ஏ.முருகன் வரவேற்றார். நடேசவைத்தியநாதன் நன்றி கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...