'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், பேராசிரியை ரமா வைத்யநாதன் பேசியதாவது: 'பயோ டெக்னாலஜி' துறையில், வேலை மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
இந்த படிப்பின் மூலம் விஞ்ஞானியாகவும், தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களின் அதிகாரியாகவும் மாறலாம்.
மருத்துவத் துறையில், அரிய மருந்துகளை கண்டுபிடித்தல்; விவசாயத்தில் புதிய விதைகளை உருவாக்குதல் என, எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உள்ளன. அதற்கு, பி.டெக்., - பி.எஸ்சி., போன்ற, 'பயோ டெக்' படிப்புகளையும், பின், முதுகலை மற்றும் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பையும் மேற்கொள்ளலாம்.
சட்ட நிபுணர் என்.பாலு: ஒவ்வொரு பட்டம் பெறவும், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் பிளஸ் 2 படித்திருக்க வேண்டும். ஆனால், சட்டம் படிக்க எந்த பாடப் பிரிவானாலும் படிக்கலாம். அனைத்து துறைகளுக்கும் சட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன. பிளஸ் 2 முடித்தால், மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்திலும், மற்ற சட்ட பல்கலை, கல்லுாரிகளிலும், ஐந்து ஆண்டுகள் சட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு உண்டு. 60 சதவீத, 'கட் ஆப்' இருந்தாலே, சட்ட படிப்பில் சேரலாம்.
பி.ஸ்ரீராம், கல்வி நிறுவனர்: உற்பத்தி மற்றும் கட்டமைப்புகள் துறையில், இன்ஜி., பட்டதாரிகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. வெறும், பி.இ., படித்தால் போதாது; செயல்முறை கற்றல் அவசியம். புதிதாக யோசிக்க வேண்டும். உற்பத்தி துறையில் புதிய பொருட்களை வடிவமைக்க கற்றுக் கொள்ள வேண்டும். 'மேக் இன் இந்தியா' திட்டம் மூலம், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்யும் நிலையில், இன்ஜி., படிப்புகளுக்கான வாய்ப்பு இன்னும்
பிரகாசமாகி உள்ளது.
பிரகாசமாகி உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...