''மருத்துவப் படிப்பு கிடைக்காத மாணவர்கள் மருத்துவம் சார்ந்த படிப்புகளும், கலை அறிவியல் பிரிவு படிப்புகளையும் தேர்வு செய்யலாம்,'' என, கல்வி ஆலோசகர் ரமேஷ்பிரபா தெரிவித்தார்.
மதுரையில் தினமலர் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் 'கலை அறிவியல் படிப்புகள்' குறித்து அவர் பேசியதாவது:
மருத்துவம், பொறியியல் படிப்புகளை தவிர கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. 'எந்த படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும்?' என மாணவர்- பெற்றோர் இணைந்து முடிவு எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு பிடிக்கும் படிப்புகளை விட, 'நன்றாக படிக்க முடியும்' என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் படிப்புகளை தேர்வு செய்ய வேண்டும்.
மருத்துவம் கிடைக்கவில்லை என்றால் ஓமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதா, பி.பார்ம்., கால்நடை மருத்துவ படிப்புகளை தேர்வு செய்யலாம். பி.வி.எஸ்சி., பி.டி.எஸ்., பி.பி.டி., மெடிக்கல் லேபாரெட்டரி டெக்., மீன்வளம், வேளாண்மை, தோட்டக்கலை, சட்டம் போன்ற படிப்புகளை தேர்வு செய்யலாம்.
திரைப்பட தொழில்நுட்பம் சார்ந்த படிப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கலாம். விளம்பரத் துறை மற்றும் ஊடகத்துறை படிப்புகளையும் தேர்வு செய்யலாம். கலை மற்றும் அறிவியல் பிரிவில் பி.காம்., சி.ஏ., உளவியல் படிப்புகள் உள்ளன. மதுரையில் சிறந்த கட்டமைப்பு கொண்ட
சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் உள்ள கேட்டரிங் அண்ட் ஓட்டல் மேனேஜ்மென்ட் டெக்., அனிமேஷன், பிலிம் அண்ட் டெலிவிஷன் புரடெக்ஷன் துறைகளில், படித்தவுடன் வேலை கிடைக்கும் படிப்புகளை தேர்வு செய்யலாம்.
சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் உள்ள கேட்டரிங் அண்ட் ஓட்டல் மேனேஜ்மென்ட் டெக்., அனிமேஷன், பிலிம் அண்ட் டெலிவிஷன் புரடெக்ஷன் துறைகளில், படித்தவுடன் வேலை கிடைக்கும் படிப்புகளை தேர்வு செய்யலாம்.
மேலும் மத்திய பல்கலைகளில் உள்ள கடல் மற்றும் கடல்சார் படிப்புகள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. இவற்றை ஆலோசித்து தேர்வு செய்து படிக்கலாம். படிப்புகளை தேர்வு செய்வதில் பெற்றோர் விருப்பத்தை மாணவர்களிடம் திணிக்க கூடாது; அவர்களின் ஆலோசனையை மாணவர்களும் புறக்கணிக்க கூடாது. சிறப்பான உள்கட்டமைப்பு உள்ள கல்லுாரிகளில் உள்ள படிப்புகளை தேர்வு செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மாணவர்கள் நலன் கருதி தினமலர் நடத்தும் 'வழிகாட்டியை', நிகழ்ச்சியாக அல்லாமல் ஓர் இயக்கமாக மக்கள் நினைக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று சரியான நாட்களில் இந்நிகழ்ச்சி நடக்கிறது மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது, என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று சரியான நாட்களில் இந்நிகழ்ச்சி நடக்கிறது மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது, என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...